திருநெல்வேலி மாநகர் பகுதியில் கடந்த 5-8 – 2021 – தேதி அன்று நடந்த அரசியல் கூட்ட மேடையில் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவரும் பேச்சாளர் என்று தம்மை கூறிக் கொண்டு வாய் வியாபாராம் செய்து வரும் கண்ணன் என்பவர் ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும், பிரபல பத்திரிக்கை, குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இவ்வாறு பேசியுள்ளார்.
ஹிந்து சமுதாயத்தை கோவிலுக்கு போகிற நாய்கள் எனவும், மிகப்பெரிய ஆன்மீகப் பணிகளை செய்து வருகிற ஹிந்துக்களின் ஆன்மிக நம்பிக்கைகுறிய இடமான காஞ்சிபுரம் ஸ்ரீகாமகோடி பீடம் பற்றி பொய் செய்திகளை பரப்பியும் கொச்சையாகவும் வேண்டுமென்றே பேசியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப் படுத்தும் விதமாகவும் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களை வேண்டுமென்றே இழிவுப்படுத்தும் நோக்கில் சீனம் ஊட்டும் விதத்தில் அவதூறுகளை பரப்பியுள்ளார்.
“நம்ம ஊரில் ஜட்ஜ்மென்ட் எல்லாம் தெருவில் தான் நீதிமன்றம் அவசியம் இல்லை நீதிமன்றம் சென்றால் நேரமாகும் அதனால் இங்கேயே போட்டு விடுவோம் என்றும் இந்தியாவில் நிறைய நபர்களை போட வேண்டும் என்று கொலை செய்யும் நோக்கத்தில் மிரட்டும் தோணியில் திருநெல்வேலியின் மாண்பை குலைக்கும் விதமாகவும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதித்தும் கொச்சைப்படுத்தியும் பொய்யான செய்திகளை வேண்டும் என்றே பேசியுள்ளார்.
மேலும் நேர்மையாக செயல்பட்டு வரும் மாண்புமிகு நீதிபதி திரு .சுப்பிரமணியம் அவர்களை வேண்டுமென்றே அவருடைய நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி ‘அவன் இவன்’ என்றும் ‘மூடு’ என்றும் ஒரு நீதிபதி என்றும் பாராமல் கீழ்த்தரமான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி அவதூறுகளை பரப்பி அவமதித்து மிக கடுமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார். பாரம்பரியமாக தேசப்பற்றுள்ள மக்களின் மிகுந்த ஆதரவு பெற்ற நாளிதழான தினமலர் அதன் நிர்வாக குடும்பத்தினர் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் வேண்டுமென்றே கீழ்தரமான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி அவதூறாக பேசி உள்ளார்.
கண்ணன் பேசிய அரசியல் மேடை பாரத தேசத்திற்கு ஒத்துவராத தேசவிரோத சித்தாந்தத்தை கொண்ட கூட்டத்தினர் மத்தியில் இவைகளை வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார், இவர் பேசிய பேச்சுகளுக்கு அங்கே இருந்த பிரிவினைவாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதனை அடுத்து தேசத்திற்கு விரோதமாகவும், ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தல், BJP, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.