புத்தக கண்காட்சியில் விஜயபாரதம் : புத்தக அரங்கம் எண் F64 !

புத்தக கண்காட்சியில் விஜயபாரதம் : புத்தக அரங்கம் எண் F64 !

Share it if you like it

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பாபாசி) 47-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனத்தில் இன்று (ஜன.3) தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 21-ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் நடத்தப்படும்.

இதற்கு ரூ.10 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து பாபாசி தலைவர் கவிதா சேது சொக்கலிங்கம், செயலர் எஸ்.கே.முருகன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை விவரம்: இந்தாண்டு அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி புத்தகக் காட்சி 19 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இந்த புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பபாசியில் உறுப்பினராக இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு 150-க்கு மேலான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆர். எஸ்.எஸ் அமைப்பின் விஜயபாரதம் இதழானது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஸ்டால் நம்பர் F64 ல் புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர். அனைவரும் புத்தகங்களை வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிது.


Share it if you like it