Share it if you like it
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் தனது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றும் (டிசம்பர் 28), நாளையும் (டிசம்பர் 29) நடைபெறவிருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தரப்பில் தெரிவித்துள்ளது.
Share it if you like it