விஜய் டி.வி.யில் ‘பீஸ்ட்’: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

விஜய் டி.வி.யில் ‘பீஸ்ட்’: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

Share it if you like it

விஜய் டி.வியில் பீஸ்ட் படம் வெளியாகப் போவதாக தகவல் பரவியதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

முன்னணி ஹீரோக்களில் ஒருவராகக் கருதப்படும் நடிகர் விஜய், நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. படத்தில் ட்ரெய்லர் வெளியானபோதே, இது யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘கூர்கா’ படத்தைப் போலவே இருக்கிறது என்கிற விமர்சனம் எழுந்தது. தற்போது, படம் வெளியாகி இருக்கும் நிலையில், ‘கூர்கா’ படத்தின் கதையேதான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. என்னவொரு வித்தியாசம் என்றால், ‘கூர்கா’ படத்தில் காமெடியனான யோகிபாபு ஹீரோ. ‘பீஸ்ட்’ படத்தில் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய் ஹீரோ. ஆகவே, அவருக்கேற்பட கூர்கா படத்தின் கதையை பட்டி, டிங்கரிங் பார்த்து பெயின்டிங் அடித்து புதிய கதை போல காட்ட முயற்சித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் நெல்சன்.

அதேபோல, படத்தின் காட்சிகளில் பெரும்பாலானவை நம்ம முடியாத அளவுக்கு ஹம்பக்காக இருக்கிறது. படம் முழுக்க ஹீரோவின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கிறதே தவிர, ஹீரோயின் காமெடியன் எல்லாம் டம்மியாக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் இருப்பதால், ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் இயக்குனர் கவுதம் மேனனுக்கு கொடுத்தது போல வெயிட்டான கேரக்டராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவரோ படம் முழுக்க விஜய்யை புகழ்வதிலேயே காலத்தை ஓட்டி விடுகிறார். படத்தில் தீவிரவாதிகளை விஜய் ஒற்றை ஆளாக கொல்வது கொஞ்சம் ஓவர்தான். அதேபோல, ஒரு தீவிரவாதியை பிடிக்க விஜய் ஒற்றை ஆளாக பாகிஸ்தானுக்குச் சென்று போர் விமானத்தில் தூக்கி வருவதெல்லாம் சுத்த ஹம்பக். சினிமாவாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

படத்தின் முதல் பாதியைத்தான் இயக்குனர் நெல்சன் சொதப்பி வைத்திருந்தார் என்றால், இரண்டாவது பாதி அதைவிட மோசம். ஷாப்பிங் மாலில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. ஆக, மொத்தத்தில் படத்தின் மொத்த காட்சியுமே அட்டர் பிளாப். இது இப்படி இருக்க, படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளை காட்டி இருப்பதால், குவைத் மற்றும் கத்தார் நாட்டில் பீஸ்ட் படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்திலும் முஸ்லிம் அமைப்புகள் தடை கோரின. ஆகவே, படம் திரைக்கும் வருமா என்ற சூழ்நிலை நிலவியது. எனினும், தடைகளை தாண்டி படம் வெளியானது. ஆனாலும், படம் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறிதான்.

இந்த நிலையில்தான், பீஸ்ட் படம் விஜய் டி.வி.யில் வெளியாகப்போவதாக காட்டுத்தீயாக தகவல்கள் பரவின. இதனால், நடிகர் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரித்தபோதுதான், விஜய் நடித்த பீஸ்ட் படத்தை வைத்து ஒரு காமெடி ஷோவை எடுத்திருக்கிறது விஜய் டி.வி. இந்த நிகழ்ச்சிதான் இன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நடிகர் விஜய்யை கலாய்த்து எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது, மாலில் விஜய் ஒன்றை ஆளாக தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளும் காட்சி செமையாக கலாய்க்கப்பட்டிருக்கிறதாம். இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் படு அப்செட் என்கிறார்கள். என்ன செய்வது சட்டையில் இருந்தால்தானே, அகப்பையில் வரும்?


Share it if you like it