தங்கள் பகுதிகளில் ஹிந்து ஆலயங்கள் இடிக்கப்படுவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பகிர்ந்து வரும் நிலையில். தமிழக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் மீது தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. அரசு அமைந்த பின்பு, தமிழகத்தில் 130 ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதாவது, விடுதலைப் போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்புக்கொடி பறக்க விட்டவர்கள், 130 புனிதமான ஹிந்து ஆலயங்களை இடித்திருப்பதாக செய்தி. சுதந்திரப் போரைக் காட்டிலும் ஹிந்து மதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். இதற்காக, வினோஜ் பி.செல்வம் மீது தி.மு.க. அரசின் போலீஸ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
தங்கள் பகுதிகளில் ஹிந்து ஆலயங்கள் இடிக்கப்படுவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகளாக பகிர்ந்து வருகின்றனர். அப்படி இருக்க, ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டதாக பதிவு செய்த தமிழக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் மீது மட்டும் தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்திருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதுதான் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மத்திய அரசையும், பாரத பிதமர் மோடியையும் தி.மு.க.வினர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் வழக்குப் பதிவு செய்யாத விடியல் ஆட்சியாளர்கள், வினோஜ் பி.செல்வம் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்திருப்பது பழிவாங்கும் செயல் என்று நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.