மனிதவெடி குண்டு: ஜைனுல் ஆபிதீன் வன்முறையை தூண்டும் பேச்சு!

மனிதவெடி குண்டு: ஜைனுல் ஆபிதீன் வன்முறையை தூண்டும் பேச்சு!

Share it if you like it

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனர் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் ஜைனுல் ஆபிதீன். இஸ்லாமிய மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். இவர், பேச்சு, எழுத்து அனைத்தும் தேசத்திற்கும், சமூகத்திற்கும் விரோதமான வகையில் இருக்கும் என்பது பலரின் ஒருமித்த கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவர் வெளியிட்டு இருக்கும் காணொளியில் முழுக்க முழுக்க வன்முறையை தூண்டும் விதமாகவும், இந்திய நாட்டை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது உள்ளது.

பாரதப் பிரதரமர் மோடியை வழக்கம்போல விமர்சனம் செய்துள்ளார். உன்னிடம் நம்பர் அதிகமாக இருக்கு என்று ஆட்டம் போடலாம் என நினைக்கிறாய். அதுதானே, உனக்கு பலம் (ஹிந்துக்கள் பெரும்பான்மை) அதைவிட வேற வேற விஷயங்கள் இருக்கு. அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்று இணைந்து ஐ.நா.சபையில் இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியாவில் இருந்து எந்த பொருளும் ஏற்றுமதி செய்ய முடியாது அங்கிருந்து இறக்குமதியும் செய்ய முடியாது.

ஏற்றுமதியை நம்பி இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் அவ்வளவு தான் திருப்பூரில் உள்ள கம்பெனியை எல்லாம் மூடி விட வேண்டியது தான். எல்லா ஏற்றுமதி கம்பெனியும் வெளிநாடுகளை நம்பி தான் இருக்கு. நாங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் எது வேண்டுமானாலும் செய்வோம் என்று நினைக்கிறாய். நாங்கள் எண்ணக்கையில் குறைவாக இருக்கலாம். அதற்கு, மேலும் எங்களிடம் என்ன இருக்கு மனிதனை அடக்கி ஆளும் பலம் இருக்கிறது. ஆயிரம் பேர் வரும் பொழுது ஒரு துப்பாக்கியை காட்டினால் அவர்கள் பயந்து விடுவார்கள் இங்கு எண்ணிக்கையா தீர்மானிக்கிறது. எண்ணிக்கையை மிஞ்ச கூடிய சாதனங்கள் எல்லாம் இருக்கு, ஒருவன் வயிற்றில் வெடிக்குண்டை கட்டிக்கொண்டு சாக தயார் என்றால் 10,000 பேர் ஒரே குண்டில் காலி என்பது போல் இக்காணொளி அமைந்து உள்ளது.

பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மம் காரணமாக வாழும் நாட்டை இழிவுப்படுத்தும் விதமாகவும், பெரும்பான்மையாக வாழும் ஹிந்துக்களை பச்சையாக மிரட்டும் தோணியில் பேசிய ஜைனுல் ஆபிதீனை உடனே கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை செய்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.


Share it if you like it