தோட்டத்துக்கு குடிநீர்… தி.மு.க. தலைவர் அராஜகம்: தட்டிக்கேட்ட அ.தி.மு.க. நிர்வாகிக்கு அடி உதை!

தோட்டத்துக்கு குடிநீர்… தி.மு.க. தலைவர் அராஜகம்: தட்டிக்கேட்ட அ.தி.மு.க. நிர்வாகிக்கு அடி உதை!

Share it if you like it

பஞ்சாயத்துக்குச் சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருக்கும் குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல், தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய தி.மு.க. பிரமுகரை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. நிர்வாகியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் இலுப்பையூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் முத்துலட்சுமி. இவரது கணவர் திருமால் தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவர்கள் காத்தான்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவ்வூரில் ஊரின் நடுவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருக்கிறது. இந்த தொட்டியில் இருக்கும் குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யாமல், தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சி வந்திருக்கிறார் திருமால். இது கிராம மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மேற்படி தகவலறிந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமு, இதுதொடர்பாக திருமாலிடம் தட்டிக்கேட்டிருக்கிறார். அப்போது, திருமாலும், அவரது மகன்களும் சேர்ந்து ராமுவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கியும் இருக்கிறார்கள். இதில் காயமடைந்த ராமு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு, திருச்சுழி காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆளும்கட்சி பிரமுகர் மீதான புகார் என்பதால் போலீஸார் வழக்கம்போல எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஊராட்சிக்குச் சொந்தமான பொது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்த குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சியதோடு, தட்டிக்கேட்ட அ.தி.மு.க. நிர்வாகியையும் தி.மு.க. பிரமுகர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it