இலவச ட்ரோன் பைலட் பயிற்சி வகுப்பில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அனுமதி என்று விளம்பரம் செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் ஆந்திர ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் தற்பொழுது ஆட்சி நடை பெற்று கொண்டு இருக்கிறது. இவர், முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ மிஷநரிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் அம்மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதுதவிர, ஆந்திராவில் தற்பொழுது மிக தீவிரமாக மதமாற்றம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதே நிலை, தொடர்ந்தால் வெகு விரைவில் ஹிந்து மதம் சிறுபான்மையினர் சமூகமாக மாறிவிடும் என்பது பல சமூக ஆர்வலர்களின் ஒருமித்த குரலாக இன்று வரை ஒலித்து வருகிறது.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.4% ஆகும். அந்தவகையில், தீவிர மதமாற்றம் காரணமாக தற்பொழுது அவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஒய்.எஸ். ஜெகன் ரெட்டி, கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ சமூகத்திற்கு அதிக உதவிகளை செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் இன்று வரை இவர் மீது கடுமையான விமர்னங்களை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், இலவச ட்ரோன் பைலட் பயிற்சி வகுப்பில் பங்குபெற கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வரின் புகைப்படம் தாங்கிய விளம்பரம் ஒன்று வெளியாகி இருப்பது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து, ஆந்திர பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் விஷ்ணு வர்தன் ரெட்டி தனது கடும் கண்டனத்தையும், அது குறித்தான தனது எண்ணத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.