“சுதேசி நாவாய்ச் சங்கம்”

“சுதேசி நாவாய்ச் சங்கம்”

Share it if you like it

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று.
வ. உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த நாள் இன்று…
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக நம்மாலும் இயங்க முடியும் என முதல் அடி எடுத்து வைத்த நாள் இன்று
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்திற்கு முலதனமாக ரூபாய் 10 லட்சம் பெற பொதுமக்களுக்கு 40,000 பங்குகள் விற்றனர்.
. பாலவநத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைத் தேவர், தனது பாம்பூர் கிராமத்தில் இருந்த நிலங்களை விற்று ரூபாய் 2 லட்சம் (2020ல் மதிப்பு ₹5.6 கோடி) பங்குகளை வாங்கினார்.
சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு பாண்டித்துரைத் தேவர் தலைவராகவும், சிதம்பரம் பிள்ளை உதவிச் செயலாளராகவும் ஆனார்.
வ.உ.சி சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்திற்கும், பிரித்தானியக் கப்பல் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தகப் போர் வெடித்தது.
பிரித்தானியக் கப்பல் நிறுவனத்தினர் கட்டணத்தை ஒரு ரூபாயாகக் குறைத்தபோது, சிதம்பரம் பிள்ளை கட்டணத்தை 50 பைசாவாகக் குறைத்தார். பின்னர் பிரித்தானிய கப்பல் நிறுவனத்தினர் பயணிகளுக்கு இலவசக் குடைகளை வழங்கியது…நம்ம ஆளுங்க செய்த வேலை வழக்கம் போல குடை வாங்கி கொண்டு அங்க தான் போனார்கள்.
வழக்கு ஒன்றி சிதம்பரம் பிள்ளைக்கு இரண்டு ஆயுள் தண்டனை (40 ஆண்டுகள்) விதிக்கப்பட்டது. சிறையில் சிதம்பரம் பிள்ளைக்கு கொடூர தண்டனைகள் வழங்கப்பட்டது. இதனால் பயந்த சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் நிறுவனத்திலிருந்து விலகினர். சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் 1911ல் கலைக்கப்பட்டது.
மேலும் கப்பல்களில் ஒன்று அதன் போட்டியாளரான பிரித்தானிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டது..

திரு.புகழ் மச்சேந்திரன் புகழ்


Share it if you like it