திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பது, நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடும் – எச்சரித்த அண்ணாமலை !

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பது, நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடும் – எச்சரித்த அண்ணாமலை !

Share it if you like it

நேற்று கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சுங்கம் மைதானம், நெசவாளர் காலனி, ஆணையங்காடு சாலை, செல்லாண்டியம்மன் கோவில், கள்ளிமடை, நஞ்சுண்டாபுரம் பகுதிகளில், பொதுமக்களின் பேரன்புடன் கூடிய ஆதரவு சூழ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, தாமரை சின்னத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்குகள் சேகரித்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் கடந்த பத்து ஆண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்கள் நலனை முன்னிறுத்தி நடந்த ஆட்சி. வீடற்றவர்களுக்கு மோடி வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் சுத்தமான குடிநீர், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை வசதி, முத்ரா கடனுதவி, விவசாயிகளுக்கு கௌரவ நிதி வருடம் ரூ.6,000 என, ஐந்து ஆண்டுகளில் ரூ.30,000, 80 கோடி இந்திய மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள், உலகப் பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி என, நமது நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் உயரிய பத்ம விருதுகள், சாமானிய மக்களைத் தேடி வருகின்றன. நம் அனைவரையும் பெருமைப்படுத்துகின்றன. இந்திய அரசியலின் அடிப்படை மாறியிருக்கிறது

ஆனால், கடந்த 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகளில், பிரதமர் யார் என்றே அறிவிக்காமல், தேர்தல் முடிந்த பிறகு, மன்மோகன் சிங் அவர்களைப் பிரதமராக அறிவித்து, பத்து ஆண்டுகள், ஊழல் செய்து நாட்டைக் கொள்ளையடித்த திமுக, காங்கிரஸ் கூட்டம், மீண்டும் இந்தி கூட்டணி என்ற பெயரில், வந்திருக்கிறது. தற்போதும் பிரதமர் யார் என்பதை அறிவிக்கவில்லை. பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்கள், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் யாரும் இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பது, நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ள போதைப் பொருள்கள் விற்பனையால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயம் பெற்றோர்களுக்கு வந்திருக்கிறது. நமது குழந்தைகளைக் காக்க, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் ஜூன் 4ஆம் தேதியிலிருந்து, அடுத்த 100 நாட்களில், மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். தமிழகம் முழுவதுமே, அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் மக்கள் எதிர்பார்க்கும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மலர்ந்திட, இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அடிப்படையாக அமையும். நமது நாடு வளர்ச்சியடையும்போது, நமது கோவையும் வளர்ச்சி பெற, நமது பிரதமர் அவர்களின் நலத்திட்டங்களை முறையாக, முழுமையாகச் செயல்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக, கோவையின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கோவையின் வளர்ச்சியைப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *