வால்மார்ட்டுக்கு தடை; லூலூவுக்கு அனுமதி: இதுதான் திராவிடன் மாடல் ஆட்சி!

வால்மார்ட்டுக்கு தடை; லூலூவுக்கு அனுமதி: இதுதான் திராவிடன் மாடல் ஆட்சி!

Share it if you like it

வால்மார்ட்டுக்கு தடை போடுறதும், லூலூவுக்கு அனுமதி கொடுப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தாலும் அது மாநிலத்துக்கு நல்ல விஷயம். ஆனால், இதே வேறு கட்சிகள் செய்தால், அது மாநிலத்துக்கு எதிரான விஷயம் என்கிற பிம்பம் கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில்தான், தமிழகத்தில் ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்டன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் இத்திட்டங்களுக்கு எதிர்ப்புக் கிளம்பவே, தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள மக்களோடு மக்களாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதேபோலதான், தற்போதைய லூலூ விவகாரமும். அமெரிக்காவைச் சேர்ந்தது வால்மார்ட் நிறுவனம். மொத்தம் மற்றும் சில்லரை வணிகத்திலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2012-ம் ஆண்டில் தமிழகத்திலும் தனது கிளையை நிறுவ விருப்பப்பட்டது. ஆனால், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், ‘அய்யகோ வால்மார்ட் நிறுவனம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம். இது தமிழகத்துக்கு வந்துவிட்டால் இங்குள்ள சில்லரை வியாபாரிகள் அனைவரும் நசுங்கிப் போவார்கள். அனைவரும் தலையில் துண்டை போட்டுக் கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமே’ என்று கூக்குரல் எழுப்பின. இதனால், தமிழகத்துக்கு வால்மார்ட் வருவது தடைபட்டது.

இந்தி நிலையில்தான், துபாய் சென்றிருந்த ஸ்டாலின், அந்நாட்டிலுள்ள லூலூ உட்பட 2 கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போட்டு விட்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, கார்ப்பரேட் நிறுவனமான அமெரிக்காவின் வால்மார்ட் தமிழகத்தில் கிளை தொடங்கினால், சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். இதே துபாயைச் சேர்ந்த லூலூ போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கினால் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும், ஓகோ இதற்குப் பெயர்தான் திராவிடன் மாடல் ஆட்சியோ என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்…


Share it if you like it