பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவோம் – பிரதமர் மோடி !

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவோம் – பிரதமர் மோடி !

Share it if you like it

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே சில நாட்களாக போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் காசாவில் உள்ள மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி பாலஸ்தீன தலைவரிடம் பேசியுள்ளதாவது :-

பிரதமர் மோடி பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவரான எச்.இ. மஹ்மூத் அப்பாஸ் அவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிர்களை இழந்ததற்கு தனது இரங்கலைத் தெரிவித்தேன். மேலும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவோம். பிராந்தியத்தில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டோம். இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுதியாக பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it