பா.ஜ.க.வில் இணைந்த பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் சாலையில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகம் போன்று மேற்குவங்கத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியின் கீழ் அம்மாநில மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க பல்வேறு அட்டூழியங்களை மேற்குவங்க விடியல் அரசு செய்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், மேற்குவங்க மாநிலம் தபன் கோஃபாநகரை சேர்ந்தவர்கள் மார்டினா கிஸ்கு, ஷியுலி மார்டி, தக்ரன் சோரன் மற்றும் மாலதி முர்மு. இவர்கள், நேற்றைய தினம் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர். பா.ஜ.க.வில் சேர்ந்த அனைவரும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது நீங்கள் எப்படி பா.ஜ.க.வில் இணைவீர்கள்? என ஆளும் கட்சியை சேர்ந்த குண்டர்கள் பெண்கள் என்று கூட பார்க்காமல் சாலையில் விழுந்து அவர்களை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்தான காணொளியை, மேற்குவங்க பா.ஜ.க. தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.