மேற்குவங்க சட்டசபையை முடக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும் மோதல் போக்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், கவர்னரை திரும்ப திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார் மம்தா. இந்த நிலையில்தான், மேற்கு வங்க சட்டசபையை திடீரென பிப்ரவரி 2-ம் தேதி முடக்கி உத்தரவு பிறப்பித்தார் கவர்னர்.
ஆனால், சட்டசபை எதற்காக முடக்கப்பட்டது என்கிற உண்மை வெளிவருவதற்கு முன்பே, தி.மு.க. ஆசிபெற்ற ஊடகங்கள் அலற துவங்கியதுடன், வழக்கம் போல மக்களிடம் பொய்த் தகவலை பரப்பி விட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக போராளிகளும் கவர்னருக்கு எதிராக கம்பு சுத்தத் தொடங்கினர். தங்களது வன்மம் நிறைந்த கருத்துக்களை பதிவு செய்தனர். தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினும், ‘ஒரு மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநர், அந்த மாநில அரசுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். மாநில அரசுடன் ஆளுநர் இணைந்து பணியாற்றுவதில்தான், ஜனநாயகம் மேலும் அழகுறும். மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கியதற்கு கடும் கண்டனம்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். மேற்கு வங்க மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே சட்டசபையை ஒத்தி வைத்ததாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனால், தமிழகத்தில் 1,000 பிரச்னைகளுக்கு மேல் தீர்வு கொடுக்க முடியாமல் திணறி வரும் முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க ஆளுநரிடம் அசிங்கப்பட்டு தமிழகத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.