Share it if you like it
நீட் தேர்விற்கு தி.மு.கவின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூர்யா தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார். இதற்கு பிரபல கல்வியாளர் டாக்டர் காயத்ரி அவர்கள் நடிகருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it
நேர்மையான பதிவு போல தெரியும், ஆனால், இது மேல்மட்ட பார்வை! எப்படி?
1) +1,+2 வில் சயின்ஸ் குரூப் எடுத்து, இரண்டு வருடங்கள் படித்தது எதற்காக?
2) தனியாக NEETக்காக பிற்பட்ட, ஏழை மாணவர்கள், மேலும் பொருட்செலவு செய்து படிக்க முடியுமா? கிராமத்து மாணவர்கள் படிக்க அருகில் பயிற்சி நிலைய வசதிகள் உண்டா?
3) +2 வெற்றிகரமாக படித்து முடித்த பின்பும், அதற்கு மேல், தேவையற்ற ஒரு போட்டித் தேர்வுக்கு மாணவர்களை பள்ளிகள் தயார் படுத்தினார்களா? தகுதித் தேர்வொன்றை ஏற்படுத்தி, பயிற்சி நிலையங்களால் தனியார் கொழுத்த பணம் சம்பாதிப்பதை அரசு ஊக்குவிக்கலாமா?
4) இந்திய அளவில், வேறுபட்ட கல்வித் திட்டங்களுடன், பல்வேறு கட்டமைப்பு வசதி வாய்ப்பு பெற்றவர்களுடன், கிராம மாணவனை போட்டியிட செய்வது முறையா?
5) இந்த பாகுபட்டால், மாணவர்கள் பாதிப்பு அடைவது அறிந்தே, ஒன்றிய அரசுடன் போராட விருப்பமின்றி, தமிழக அரசு அக்கரையுடன் 7.5% சதவீதம் ஒதுக்கப் பட்டுள்ளது, தெரியுமா?
6) 15%,சதவீத ஒதுக்கீடு, JIPMER போன்றவற்றை ஒப்பீடு செய்யாமல், அவற்றிற்கு தகுதி தேர்வு, என ஏன் கேள்வி எழுப்புகிறார்? அதற்கு வித்தியாசம் உள்ளது.
7) 85% சதவீத சீட்டில் NEET என்ற பெயரில் மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்க்க வேண்டுமா? 69% சதவீதம் முழுவதையும் தமிழக மாணவர்கள் அனுபவிக்க முடியுமா?
8) மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது, தமிழக மக்களுக்கான தேர்தல் வாக்குறுதி. தெரியுமா?
9) கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஒன்றிய ஊடுருவல், திட்டமிட்ட கலாச்சார சீரழிவு தெரியுமா?
10) ஒன்றிய அரசின், hidden agenda வை, படிப்படியாக கூர்ந்து பார்த்தீர்களா?
11) பலதரப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதலால், ஏற்படும் பாதிப்பு திரு சூரியாவிற்கு தெரியாதா? அதனால் ஏற்படும் தாக்கம், உங்களுக்கும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளதா?
12) முன்னைய அரசுகள் NEETஐ முன்னெடுத்து இருந்தாலும், தமிழகத்தில் இப்போதுதான் தகுதித் தேர்வுகளும், தாக்கமும் தெரிகிறது. தெரிந்தும், கேள்வி கேட்பது தவறா? யார் கொண்டு வந்தாலும் தவறுதான்!
13) தேர்வில், கட்டுப்பாடு விதிகள், ஒவ்வொன்றிற்கும் காரணம் கூற முடியுமா? தேர்வுக்கு நுழையும் போதே மனத்தளர்ச்சியை ஏற்படுத்தினால் தேர்வை உருப்படியாக எழுத முடியுமா?
14) உண்மையாகவே விஞ்ஞானி திரு கஸ்தூரி ரங்கன், புதிய கல்வித் திட்டத்தை வகுத்தாரா? அல்லது வகுத்து வைக்கப்பட்டிருந்ததா?
15) கல்வியாளர் மாணவர்கள் படும் பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள, தவிர்ப்பது ஏன்?
இந்தியாவில் நகர்புறமும், அதைவிட அதிகமாக கிராமப்புறமும், சமூக நீதி மறுக்கப்பட்டு அல்லல்படும் பெரிய சமூகமும் உள்ளது, என்பது தெரிந்து, பேசுவது நல்லது.