திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் இன்று வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த நேர்காணலை நடத்தினர்.
திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் நேர்காணலில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் அவரிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
உங்கள் தொகுதியில் நீங்கள் செய்தது என்ன? உங்களை பற்றி சொல்லுங்க.. உங்களுக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முறையான கேள்விகளை ஸ்டாலின் கனிமொழியிடம் வைத்தார். அதற்கு திருதிருவென பதில் தெரியாமல் முழித்த கனிமொழி திகைத்தார். இதனை சுதாரித்துக்கொண்ட ஸ்டாலின் நீங்க தான் எம்பி போய்ட்டு வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாத நிலையில் தூத்துக்குடிக்கு மீண்டும் கனிமொழியை தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக சார்பில் கனிமொழியை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள், அப்படியே வந்தாலும் திமுக மேலிடம் கனிமொழிக்கு தான் போட்டியிட வாய்ப்பினை வழங்குவர் என்று அனைவருக்கும் தெரியும். மக்களை ஏமாற்ற இவர்கள் நடத்தும் நாடகத்தினை பார்த்து சகிக்க முடியவில்லை. முதல்வராக இருக்கும் ஸ்டாலினே தேர்தலுக்கு முன் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று தினமும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை அடுக்கிக்கொண்டே இருக்கிறார். இதில் ஸ்டாலின் நேர்காணல் எடுப்பாராம். கனிமொழி பதில் சொல்வாராம். இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.