மக்கள் தங்களின் தன்னலமற்ற அன்பும் பாசமும் ஒரு தலைவர் மேல் வைத்துவிட்டால் அந்த அன்பிற்கு அதற்கு எல்லையே கிடையாது . அப்படிப்பட்டவர்கள் தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்த எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் வெற்றிக்காக, சாலையோரத்தில் ஒரு மூதாட்டி பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு கண்ணீர் மல்க தலை வணங்கிக் மரியாதை செலுத்தும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். ஆனால் இவருக்கு பின் மக்களின் அன்பும் மரியாதையும் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் பிரதமர் மோடியின் உருவபடத்தை மிகுந்த மரியாதையோடு கண்ணீர் மல்க தரையில் விழுந்து வணங்கும் நிகழ்வானது காண்போரை கண்கலங்க வைக்கிறது.
ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை பாண்டி பஜாரில் பிரதமர் மோடியின் ரோட் ஷோவில் கலந்து கொள்ள மேடவாக்கத்திலிருந்து முதியவர்கள் மற்றும் ஏழைகள் வந்திருந்தனர். ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை பிரதமர் சாலையோரத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்து வணங்கியுள்ளார்.
வயதான பெண் தனது காலணிகளை கழற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் படத்திற்கு முன் கால்களை மடக்கி வணங்குவதும், படத்திற்கு மலர்களை வழங்குவதும் அனைவரையும் நெகிழ வைத்தது. இதேபோல் மற்றொரு காணொளியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை சுமதி என்பவர், பிரதமர் மோடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அனைத்து கவலைகள் மற்றும் பிரச்சனைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்றும், அவர் தனது எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், அயோத்தியில் ராமர் கோயிலை வெற்றிகரமாகக் கட்டியதால், பகவான் ராமர் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார். அவர் பிரார்த்தனையின் போதும் பிரதமர் மோடியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்ததாக பேசிய காணொளியும் வைரலானது.
தமிழகத்தில் பாஜகவுக்கும், மோடிக்கும் வாக்களிக்கப் போவதாக மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். தடைகளை மீறி ராமர் கோயில் கட்ட அவரால் முடிந்ததே இதற்கு முக்கியக் காரணம். ஜனவரி 22 அன்று ராம் லல்லாவின் மூர்த்தி மற்றும் பிரான் பிரதிஷ்டை நிறுவப்பட்டது தமிழக மக்களை நெகிழ வைத்துள்ளது. அந்த மூதாட்டியின் தன்னலமற்ற பக்தி, பிரதமர் மோடியின் கவனத்தை அவர் பக்கம் திருப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
https://x.com/MithilaWaala/status/1777942950556930366