முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு, முதலீடு ஈர்க்கிறோம் என்ற பெயரில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் என வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தார். ஒரு ரூபாய் கூட முதலீடு தமிழகத்துக்கு வரவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு, முதலீடு ஈர்க்கிறோம் என்ற பெயரில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் என வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தார். ஒரு ரூபாய் கூட முதலீடு தமிழகத்துக்கு வரவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். மறுபடியும் ஸ்பெயினுக்கு முதலீடு ஈர்க்கச் செல்கிறோம் என்ற பெயரில் சுற்றுலா மேற்கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின், பத்து நாட்கள் ஸ்பெயினில் தங்கியிருப்பது முதலீட்டை ஈர்க்க என்ற திமுகவின் கட்டுக்கதையை நம்ப மக்கள் முட்டாள்கள் அல்ல. திறனற்ற, மோசமான, லஞ்ச ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
முதலீட்டை ஈர்க்கச் சொல்வதாக வெளிநாடுகளுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் முதலீட்டார்களிடம் பேசுவதுபோல் ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை. அதற்கு மாறாக அவர் கோட் சூட் போட்டு சூரிய உதயத்தின்போது புகைப்படம் எடுத்து அதை பெருமையாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அரசு பயணமாக சென்ற ஸ்டாலின் தனது மனைவியை உடன் அழைத்து செல்வதற்கான காரணம் என்ன ? இதுதான் முதலீட்டை ஈர்க்கும் லட்சணமா ? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்விக்கணைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.