கேந்திரிய வித்யாலயாவிற்கு பொங்கிய வைகோ, கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக  பொங்காதது ஏன்?

கேந்திரிய வித்யாலயாவிற்கு பொங்கிய வைகோ, கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக  பொங்காதது ஏன்?

Share it if you like it

கேந்திரீய வித்யாலயா, பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக அண்மையில் ம.தி.மு.க தலைவர் வைகோ கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் S.R. சேகர் அவர்கள் வைகோவிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.கவினர் நடத்தும் 43 பள்ளிகளில் ஆங்கிலமும், ஹிந்தியும், மட்டுமே உள்ளது உங்கள் கேள்வியை முதலில் அங்கு கேட்கவும். 2021- ல் மதிமுகவை ஸ்டாலினிடம் வித்தாச்சே. தற்போது திமுகவிடம் பென்சன் மட்டுமே வாங்கி வருகிறீர்கள். இன்னும் வாய்ச்சவடால் மட்டும் குறையவில்லை. KV ஐ குறை கூறும் நீங்கள் ஏன் உங்கள் MP கோட்டாவில் 12 பேரை KV-யில் சேர்த்து விட்டீர்கள்? கேள்வி இங்கே பதில் எங்கே? வைகோ என்று கேள்வி எழுப்பியுள்ளார் S.R. சேகர்.

பா.ஜ.க, மத்திய அரசு, மோடி, என்றால் உடனே கேள்வி எழுப்பும் வைகோ.  தி.மு.க பொதுச் செயலாளர் மகன் நடத்தும் பள்ளி நிர்வாகம்.  ஹிந்தி, சமஸ்கிருதம், பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்களை தேடிய பொழுது, நமது கொள்கைக்கு சமஸ்கிருதம், ஹிந்தி, எதிரானது என்று வைகோ அவர்கள், கதிர் ஆனந்த்க்கு எதிராக ஏன்? பொங்கவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image

May be an image of 2 people

 

 

 


Share it if you like it