பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கான 2020 -2021 வருடாந்திர ஒப்பந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டு உள்ளது. இதில் (Grade A+) (Grade A) (Grade B) ( Grade C ) என்று நான்கு வகை உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஒருவர் இடம் பெற வேண்டுமானால். ஒரு வருடத்தில் குறைந்தது 3 டெஸ்டு போட்டி அல்லது 7 ஒரு நாள் போட்டி அல்லது 10 T20 போட்டியில் விளையாடி இருந்தால் மட்டுமே அந்த ஒப்பந்தத்தில் இடம் பெறவும். அதில் குறிப்பிட்டு உள்ள தொகையை பெற முடியும் என்பது நிதர்சனம்.
தமிழக வீரர் நடராஜன் அவர்கள் இதுவரை 1 டெஸ்ட் 2 ODI மற்றும் 4 T20 விளையாடியுள்ளார். எதிர்காலத்தில் நடராஜன் தொடர்ந்து, பல போட்டிகளில் கலந்து கொள்ளும் பொழுது. அவரும் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெறுவார். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
உண்மை இவ்வாறு இருக்க, பூணுல் அணிந்து உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. என்று சில அறிவு ஜீவிகள் கூறி வருவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது என்பது திண்ணம்.
ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து விளையாட்டு வீரர்கள். இந்தியர்கள் என்கின்ற ஒற்றைப் புள்ளியில் இன்று வரை விளையாடி வருகின்றனர். இவர்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் விதமாக, சில சில்லறை போராளிகள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனை நடராஜன் உட்பட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை புரளி பேசும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.