குணம் ஆகாத குணசேகரன் மீது நடவடிக்கை எடுப்பாரா தயாநிதி மாறன்?

குணம் ஆகாத குணசேகரன் மீது நடவடிக்கை எடுப்பாரா தயாநிதி மாறன்?

Share it if you like it

மத்திய அரசு, மோடி, பா.ஜ.க  மற்றும் ஹிந்துக்கள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவத்தை சன் நியூஸ் தலைமை ஆசிரியர் குணசேகரன் அதிக முக்கியத்துவத்தை இன்று வரை வழங்கி வருகிறார் என்பது அனைவரின் கருத்தாகவும், எண்ணமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தோல்வியடைந்த ஸ்டிக்கர் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டாமல். தனது முழு கவனத்தையும், பீகார், உ.பி-யின் பக்கமே கவனம் செலுத்தி வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் உ.பியில் இஸ்லாமிய முதியவர் ஒருவரை சில மர்ம நபர்கள் தாக்கி அவரது தாடியை மழிக்கும் விதமாகவும்.

“ஜெய் ஸ்ரீராம்” என சொல்லக் கூறி அந்த முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும். அதை நேரில் நின்று தாங்கள் பார்த்தது போல், சன் ஊடகம்  மற்றும் குறிப்பிட்ட கட்சியிடம் பிஸ்கெட் வாங்கும், ஊடகங்கள் வரை யோகி குறித்து தங்களின் வன்மத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இது போன்ற தவறான செய்திகளை வெளியிட்டு தயாநிதி மாறனுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தரும் குணம் ஆகாத குணசேகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it