சாத்தான் குளத்தில் காவல்துறை விசாரணையின் போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்.
சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்னும் விவசாயி. ஏத்தாபூர் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவரால் மிக கடுமையாக தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் குறித்து கனிமொழி வாய் திறப்பார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்று, சாத்தான்குளத்தில் சென்ற ஆண்டு காவல்துறையால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த திரு.ஜெயராஜ் மற்றும் திரு.பெனிக்ஸ் அவர்களின் கடையில் இருவரது உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திய போது. pic.twitter.com/lTC8YgR5af
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 22, 2021
மீளாத்துயரில் வற்றாத கண்ணீரில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளையும் வைராகியத்தோடு எதிர்கொள்ளும் தாய்களை சந்தித்து ஆறுதலும் உறுதியும் சொன்னேன். pic.twitter.com/NkVTuq1RLg
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 22, 2021