திமுக கட்சியின் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கிய நிலையில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக கட்சியின் தலைவர் 2014 ல் இராமநாதபுரத்தில் வாக்கு கேட்டு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி என்னவானது? ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக அறிவிப்பேன் என்று மோடி சொன்னார். அதை செய்தாரா? 2019 தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் மோடி சுட்ட பல வடைகள் தேர்தல் முடிந்ததும் ஊசி போய் விட்டது என்று ஏளனமாக பேசி இருக்கிறார்.
வாயால் வடை சுட்டு அதை கற்பனையில் வயிராற சாப்பிட வைத்து அதற்கு உண்மையில் விலை வைத்து வசூலிக்கும் நயவஞ்சகம் திமுகவின் பாரம்பரியம். . 2014 ல் புனித தலமான இராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக அறிவிப்பதாக அவர் கொடுத்த வாக்குறுதியை அவர் எப்போதோ நிறைவேற்ற தொடங்கி விட்டார். அதன் செயல் வடிவம் மூழுமையாவதன் வெளிப்பாடு தான் அவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இராமேஸ்வரம் உள்ளடங்கும் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவது என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு புரியும்.
. இராமேஸ்வரம் என்பது வெறும் கடற்கரை தலமோ பொழுது போக்கு உல்லாசம் தரும் சுக வாசஸ்தலமோ அல்ல. அது இந்துக்களின் புனித தலம். சைவம் – வைணவம் இரண்டையும் இணைக்கும் புண்ய ஷேத்திரம். தேவியின் சக்தி பீடங்களில் ஒன்று. தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இந்துக்களின் சப்த முக்தி தலங்களில் முக்கிய தலம் என்ற பெரும் உன்னதம் வாய்ந்த திவ்ய தலம். இராமேஸ்வரம் நிலவியல் ரீதியாக கடல் பரப்பை ஒட்டிய சிறு நிலப்பரப்பு கிட்டத்தட்ட தீவு போல. அங்கிருந்து கைக்கெட்டும் தூரத்தில் இலங்கை என்ற அண்டை நாடு. இடையே சர்வதேச நீர்வழி தடம் என்று அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேந்திரம். 1960 களின் முடிவில் ஏற்பட்ட பெரும் சூறாவளி புயல் -மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை கடந்து வந்த பகுதி. பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு முழுமையாக சிதிலமடைந்த மக்கள் வாழ தகுதியற்ற நிலம் என்று அப்போதைய இந்திய அரசு அறிவித்த தனுஷ் கோடி முனையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு நிலப்பகுதியை சர்வதேச சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் எனில் அதற்கு சர்வதேச சுற்றுலா மையத்தின் அங்கீகாரம் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பு வேண்டும். அதன் அனுமதி – அங்கீகாரம் வேண்டும் எனில் அந்த குறிப்பிட்ட தலம் அதற்கான பாதுகாப்பு வரையறை – உள்கட்டமைப்பு மற்றும் சகல போக்குவரத்து முனைமம் கொண்டதாக இருக்க வேண்டும். அங்கு குவியும் சர்வதேச சமூகம் சார்ந்த மக்களுக்கு தேவையான பாதுகாப்பு – உணவு – மருத்துவம் – உள்கட்டமைப்பு – அத்யாவசிய தேவைகள் மற்றும் உயர்ந்த சுகாதார வசதிகள் இருக்க வேண்டும். இதை எல்லாம் இராமேஸ்வரத்தில் செய்து முடித்து விட்டு தான் சர்வதேச அங்கீகாரம் வேண்டும் என்று கேட்க முடியும்.
அதற்கான முதல் கட்டமாக தான் தென் இந்திய அளவில் கடல் வழி பாதுகாப்பு உறுதி செய்ய தேவையான கண்காணிப்பு மற்றும் சட்ட விரோதம் செயல்கள் தடுப்பு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மோடி அரசு செய்யத் தொடங்கியது. மக்கள் வாழ தகுதியற்றது என்று அரை நூற்றாண்டு காலம் கைவிடப்பட்ட தனுஷ்கோடி பகுதியை முழுமையாக சீர் செய்து அனைத்து உள்கட்டமைப்புகளை செய்து முடித்து இன்று ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வழியாக மக்கள் பாதுகாப்பாக சென்று திரும்பி வருவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் அங்கு தயாராகிறது.
மறுபக்கம் ராமேஸ்வரத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆலயம் அது சார்ந்த நடவடிக்கைகளை இருக்கும் குளறுபடிகளை இன்று வரை சரி செய்ய முடியாத நிலை . அதற்கு திமுக அரசிடம் இருந்தும் எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது. இதையெல்லாம் மீறி அங்கு தேவையான உள்கட்டமைப்புகளை செய்ய வேண்டும் எனில் அதற்குண்டான நேரடி கண்காணிப்பு மற்றும் சர்வதேச கவன ஈர்ப்பு இரண்டையும் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் கூட மோடி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இராமேஸ்வரம் உள்ளடங்கும் இராமநாதபுரம் தொகுதிக்கு தயாராக கூடும்.
எப்படி காசியை மீட்டெடுப்பேன். கங்கையை தூய்மைப்படுத்துவேன். என்று வாக்குறுதி கொடுத்தபடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கங்கையை தூய்மைப்படுத்தி காசியை ஆக்கிரமிப்பில் இருந்தும் சுகாதார சீர்கேட்டில் இருந்தும் மீட்டெடுத்து இன்று உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் மகிழ்ச்சியோடும் மன நிறைவோடு வந்து போகும் வகையில் திருப்தியான அனுபவம் தரும் புண்ணிய தலமாக காசியை மீட்டெடுத்தாரோ? அதேபோல நிச்சயம் அவர் இராமேஸ்வரத்தையும் மீட்டெடுப்பார். அந்த கவலை திமுகவிற்குவேண்டாம்.
பாம்பன் பாலத்தை பலப்படுத்துவது – சாலைப்போக்குவரத்துகளை மேம்படுத்துவது – ரயில் போக்குவரத்து இருவழிப்பாதையாக மாற்றுவது – ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ரயில் முனைமமாக மாற்ற தேவையான திட்டங்கள் வேகமாக நடைபெறுகிறது. ராமேஸ்வரத்திற்கு வெகு அருகில் ஒரு சர்வதேச தரத்திலான விமான நிலையத்தை கட்டமைக்கும் பணி மீதம் இருக்கிறது. இதையெல்லாம் தரமான உள் கட்டமைப்புகளுடன் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி சர்வதேச தரத்திற்கு கட்டமைக்க வேண்டும் . அதிலும் ராமேஸ்வரம் வெறும் சுற்றுலா தலம் மட்டுமல்ல. அது ஆன்மீகத் திருத்தலம் என்பதால் இந்துக்களின் ஆன்மீக பாரம்பரிய மரபுகள் பாதிக்காத வகையில் அதே நேரத்தில் சர்வதேச தரத்தில் மக்கள் வந்து போகவும் ஏதுவாக இருக்கும் வகையில் தேவையான அனைத்து கொள்கை முடிவுகள் – திட்ட வரவுகளையும் பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு தேர்ந்தெடுத்து முடிவு செய்த பிறகு ராமேஸ்வரம் சர்வதேச தலமாகவும் ஆன்மீகப் புனித தலமாகவும் அறிவிக்க தேவையான கொள்கை முடிவை சர்வதேச சமூகத்தில் கோரிக்கையாக மோடி அரசு பரிந்துரை அனுப்பி வைக்கும்.
ஒரு கோரிக்கையை முன் வைத்தால் அதை தவிர்ப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல் அதை ஏற்பதற்கு எல்லா காரணமும் இருக்கும் படியான ஒரு கொள்கை முடிவை தான் மோடி அரசு பரிசீலனைக்கு அனுப்பும் அதுதான் ஆர்எஸ்எஸ் பாஜக மோடி அரசு. வாரம் ஒரு தீர்மானம் போட்டு அதில் ஆயிரம் குளறுபடிகளோடு ஆளுநருக்கு அனுப்பி வைத்து அவர் விதிகளை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பினால் ஆளுநர் அனுமதி தரவில்லை .அரசியல் செய்கிறார் என்று நாலாந்தர அரசியல் செய்யும் மலிவான மனநிலை மோடிக்கு கிடையாது. அதனால் தான் அவர் சர்வதேச தலைவராக உயர்ந்து நிற்கிறார்.
நகராட்சிகளை எல்லாம் மாநகராட்சியாக தரம் உயர்த்துகிறோம் என்று பெருமை பேசிவிட்டு நகராட்சி என்பதற்கு முன்பு மா என்று ஒரு வார்த்தையை மட்டும் கூடுதலாக சேர்த்து விட்டு வரி வசூலை மட்டும் உயர்த்திவிட்டு எந்த ஒரு உள் கட்டமைப்பையும் செய்யாமல் நிர்வாக சீர்கேட்டையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீரழிக்கும் கேடுகெட்ட நிர்வாகத்தை மோடி அரசு ஒரு நாளும் செய்யாது . அதனால் தான் மக்கள் அவரை மூன்று முறை முதல்வராகவும் தேர்ந்தெடுத்தார்கள். மூன்றாவது முறை பிரதமராகவும் தேர்ந்தெடுக்க தயாராக இருக்கிறார்கள்.
மோடி அரசு செய்யும் எந்த ஒரு உள் கட்டமைப்பு வசதிகளையும் லஞ்சம் – ஊழல் இல்லாத கட்டிங் – கமிஷனுக்கு உட்படாத சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதியாக தான் செய்து கொடுப்பார். ஆலயத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தருகிறேன் என்று முன்வந்த தொழிலதிபரிடம் கூட கோவிலுக்கு செல்வதில் மூன்றில் ஒரு பங்கு கமிஷன் கேட்டு அவரை திரும்பி பார்க்காமல் ஓடவிட்ட அயோக்கியத்தனம் எல்லாம் பாஜக கட்சிக்கு தெரியாது. அதனால் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் ஒரு வாக்கிற்கு ஆயிரத்தில் விலை நிர்ணயம் செய்யலாமா ? அல்லது லட்சத்தில் நிர்ணயம் செய்யலாமா? என்று அவரவர் கட்சியின் வெற்றி பற்றி மட்டும் யோசித்தால் போதுமானது. இராமேஸ்வரம் பற்றிய கவலை வேண்டாம். அதை மோடி பார்த்துக் கொள்வார் .
மோடியிடம் தாராளமாக கேள்வி கேட்கலாம். அதை ராமநாதபுரத்தில் வைத்தும் கேட்கலாம். நேரடியாக அவரது அலுவலகத்திற்கே போய்க் கூட கேட்க முடியும் .அதை கேட்பதற்கு கட்சி தலைவராகவோ முதல்வராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களின் வீட்டில் இருக்கும் பணியாளர்கள் கூட நிச்சயம் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முடியும் .அதற்கு அவர் நிச்சயம் பதிலும் தருவார் .சில நேரங்களில் அது வார்த்தையாக இருக்கும். பல நேரங்களில் அது நடவடிக்கையாக வெளிப்படும். ஆனால் நிபந்தனை ஒன்றுதான் எதிரில் இருப்பவர் கேட்கும் கேள்வி உண்மையின் அடிப்படையில் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். வெற்று அரசியலுக்கு வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ ? என்று கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அவர் பதில் சொல்வது அவரின் காலம் – உழைப்பு விரையம் என்பதால் அதையெல்லாம் அவர் அமைதியாக கடந்து போய்விடுவார். அவரின் முன்னிருக்கும் பொறுப்புக்கள் – கடமைகள் – சவால்கள் அதன் காரணமாக அவருக்கு இருக்கும் பணி சுமை அப்படியானது. பொழுதுபோக்கிற்கு படம் பார்த்து அதற்கு விமர்சனம் செய்வதும் விளையாட்டுப் போட்டிகளை நேரில் கண்டு உற்சாகம் கொடுக்கும் வகையிலான பொழுதுபோக்கு அரசியலை அவர் செய்யவில்லை. முழுவதுமான மக்கள் நலன் தேச நலன் சார்ந்த வளர்ச்சி பாதுகாப்பு முன்னிறுத்தும் மக்கள் நல அரசை அவர் முன்னெடுக்கிறார். அவரிடம் வெற்று கூச்சலுக்கு இடமில்லை .
ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக அறிவிப்பதற்கான முன்னோட்டம் தான் தென் தமிழகத்தின் கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவது. தென் தமிழகத்தின் கடல் வழியே நடைபெறும் போதை ஆயுதங்கள் கடத்தல்கள் ஊடுருவல்களை கண்காணித்து தடுத்து நிறுத்துவதும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதுமான மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகள். ஆனால் அதை எல்லாம் எதிர்ப்பது தேவையான ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பை மாநில உளவுத் துறை காவல் துறை அளவில் கொடுக்க மறுப்பது இதற்கெல்லாம் இடைஞ்சலாக இருக்கிறார் என்பதற்காக தினமும் ஆளுநரை பழிப்பது என்று சில்லரைத்தனங்கள் அத்தனையும் செய்துவிட்டு இன்று சர்வதேச சுற்றுலாத்தலமாக ராமேஸ்வரத்தை அறிவிப்பது என்ன ஆனது ? என்று கேள்வி. என்ன ஒரு மட்டமான அரசியல்.?
ஆனால் அதே ராமேஸ்வரத்தில் ஆன்மீக தலமாக நாடெங்கிலும் இருந்து வந்து போகும் மக்களுக்காகவோ உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்காகவோ தேவையான எந்த ஒரு ஆக்கபூர்வமான உள்கட்டமைப்பையோ அல்லது மருத்துவம் சுகாதாரம் சார்ந்த பணிகளையும் இதுவரையில் மாநில அரசு செய்திருக்கிறதா? என்றால் அதற்கு பதில் வராது. காரணம் ராமேஸ்வரம் போன்ற இந்துக்களின் புனித தலங்களில் துரும்பை கிள்ளி போட்டு விட்டால் கூட தொப்புள்கொடி உறவுகளும் அன்பு சகோதரர்களும் ஆட்சிக்கு சங்கு ஊதி விடுவார்கள் என்பது நன்றாக தெரியும். அதனால் அவர்கள் அதை எல்லாம் செய்ய மாட்டார்கள் . அது மோடிக்கு நன்றாக தெரியும் .அதனால் தான் அவர் தானாகவே வந்து களம் இறங்குகிறார்.
ராமநாதபுரத்தில் நாம் தான் போட்டியிடுவோம் சிறுபான்மை வாக்குகளை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று நிரந்தர கனவில் இருந்த சிலருக்கு மோடி அங்கு வந்து போட்டியிடுவது பேரிடியாகத்தான் இருக்கும். அதை தடுக்கவும் முடியாது. எதிர்த்து வெற்றி பெறவும் முடியாது என்ற நிலையில் எப்படியாவது அவரை போட்டியிடாமல் செய்து விட முடியுமா? என்று இப்போதே பிரயத்தனம் செய்வது புரிகிறது. ராமனை அவமதித்தவர்கள். – அவனது சேது பாலத்தை தகர்க்க முயன்றவர்கள் – ராமனை அவமதித்ததால் தான் திமுகவிற்கு பெரும் வெற்றி பெற்றது என்று பேசியவர்களை – இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதை கூட தட்டிக் கழித்தவர்களை – புனித தலமான ராமேஸ்வர பகுதியில் முக்கியமான விசேஷங்கள் வரும் பொழுது உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு கூட இடையூஞ்சல் செய்வது – கொரோனா காரணம் காட்டி இடையூறுகளை ஏற்படுத்தியது என்று அத்தனை இந்து விரோதத்தையும் செய்தவர்கள் வாயாலே இராமேஸ்வரம் சர்வதேச சுற்றுலாவாக அறிவிக்க ஆவண செய்கிறேன் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆனது? என்று கேட்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாரே அதுவே மோடியின் மகத்தான வெற்றி.