கொரோனா ஏற்படுத்தி இருக்கும் அச்சத்தில் இருந்து மக்கள் மீளவும். அவர்களுக்கு புது நம்பிக்கை, ஊக்கம் அளிக்கும் விதமாக. பா.ஜ.க ஆளும் குஜராத் மாநில அரசு பல்வேறு சலுகைகளை அம்மாநில மக்களுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்து இருக்கும் சலுகைகள் போன்றே தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும் என்று மக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று எதிரொலி காரணமாக. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வணிகர்களின் நலன் கருதி. ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் நீர் பூங்காக்களின் மின்சார கட்டணங்களை ஒரு வருடத்திற்கு அதாவது, 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை தள்ளுபடி செய்வதாக குஜராத் அரசு முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
In a sensitive gesture, CM Shri @vijayrupanibjp decides to waive-off property tax as well as fixed charge in electricity bills of hotels, resorts, restaurants and water parks affected by Corona pandemic for one year i.e, from April 1, 2021 to March 31, 2022 in the State. pic.twitter.com/0Cs1apQKTy
— CMO Gujarat (@CMOGuj) June 7, 2021