நாட்டு மக்களிடம் பாரதப் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பேசும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
- கொரோனா 2-வது அலையால், பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். நாம் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும். என நான் நம்புகிறேன் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்
- கடந்தாண்டை போன்ற மோசமான சூழல் தற்போதுஇல்லை. மாஸ்க் வென்டிலேட்டர் என மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்துள்ளோம் பொது முடக்கத்தை கடைசி ஆயுதமாகவே மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரிப்பதன் மூலம் முழுமுடக்கத்தை தடுக்கலாம்.
- அவசியமான தேவைகளை தவிர்த்து, பிறவற்றுக்கு வெளியே செல்ல வேண்டாம். முடிந்தவரையில் வீட்டில் இருந்தே பணி செய்ய முன்வர வேண்டும் தடுப்பூசி உற்பத்தியில் 50% நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் புலம் பெயர் தொழிலாளர்கள் பணியிடத்தில் இருந்து வெளியேற வேண்டாம்.
- மத்திய மாநில அரசுகள், தனியார் துறை இணைந்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை உலகிலேயே விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் தான் கிடைக்கிறது தயாரித்த தடுப்பூசிகளை மாநிலங்கள், தனியார் துறையால் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பாரதப் பிரதமர் மோடி கேட்டு கொண்டதற்கு இணங்க டா டா குழுமம் தனது எண்ணத்தை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளது.
பாரதப் பிரதமர் மோடி, இந்திய மக்களிடம் கேட்டு கொண்டது பாராட்டுக்குறியது. டாடா குழுமம் ( COVID19- க்கு ) எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முடிந்த வரை முயற்சி செய்ய கடமைப்பட்டுள்ளோம். ஆக்ஸிஜன் நெருக்கடியைத் தணிக்க, சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க. டாடா குழு திரவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தணிப்பதற்கும் 24 கிரையோஜெனிக் கொள்கலன்களை இறக்குமதி செய்கிறது என்று குறிப்பிட்டு உள்ளது.
(பி.கு)
”அனைவருக்கும் இந்த வருடம் மிகவும் சவால் நிறைந்ததாக ஆண்டாக உள்ளது. இச்சூழ்நிலையில் நல்ல புரிதலும், அதிக அன்பு, மற்றும் அதிக பொறுமையும் தேவைப்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், ஒற்றுமையாகவும், இருக்க வேண்டிய நேரம். காயப்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல. அரவணைப்பும், ஊக்கமும், நிறைந்த தளமாக சமூக வலைதளங்கள் மாற வேண்டும் என்று கடந்த ஆண்டு ரத்தன் டாடா குறிப்பிட்டு இருந்தார்.
1,500 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கும். ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பிசிஆர் கருவிகளை தமிழகத்திற்கு டாடா குழுமம் கடந்த ஆண்டு வழங்கி இருந்தது.
அதானி, அம்பானி, என்று தொடர்ந்து கிண்டல் செய்யும், சீமான், திருமா, சுந்தரவள்ளி, அருணன், போன்ற சில்லறை போராளிகள். ரத்தன் டாடா போன்று கலாநிதி மாறனும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூற முன்வருவார்களா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TATA had always shown exemplary ways to lead the pack. Bravo!! @TataCompanies
— KhushbuSundar (@khushsundar) April 20, 2021