ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாசு கட்டுப்பாட்டு.வாரியத்தின் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.அதில சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடியில் விடுவதால் சுற்று வட்டார கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. வீட்டின் அருகில் குளம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் 4 கிமீ தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், மேலும் தண்ணீரின் உப்புத்தண்மை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் தங்கள் பகுதியில் உள்ள 4 வயது குழந்தை கூட புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் சூழல் இருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கிராம மக்கள் ஆதங்கத்துடன் குற்றம் சாட்டினர்.
அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்திற்குள்ளாவது இந்த பிரச்சனைகளை சரி செய்யுமாறு அந்த கிராம மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை எச்சரித்துவிட்டு சென்றனர்.