250 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்த வில்லியம் பேட்டர்சன் மற்றும் யுவான் மேரி !

250 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்த வில்லியம் பேட்டர்சன் மற்றும் யுவான் மேரி !

Share it if you like it

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், புனித தோமையார் மலை கிராமம், அரசு புறம்போக்கு புல எண் 441/ 1ஏ1ஏ3 பரப்பு 1 ஏக்கர் 11,047 சதுர அடி ரூ 250 கோடி மதிப்புள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது. ஆனால் வில்லியம் பேட்டர்சன் மற்றும் யுவான் மேரி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். மேலும் அந்த இடத்துக்கு பட்டாவும் பெற்றிருந்தனர். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர்.ராகுல் நாத் உத்தரவின் பேரில் தாம்பரம் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், இதற்கு பட்டா தவறுதலாக வழங்கப்பட்டது எனவும் ஆய்வில் கண்டரியப்பட்டது. இதையடுத்து பட்டாவை ரத்து செய்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டார். இதனையடுத்து மேற்படி நிலம் பல்லாவரம் வட்டாட்சியர் சார்பில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட் டது.


Share it if you like it