வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா உட்பட குடும்பத்தினரின் பெயரில் மொத்தம் ரூ.88 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரத்து 643 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர் ஆனந்த் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்கு சேகரிக்கும் இடத்திலிருந்த பெண்களை பார்த்து, “மேடையில் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பெண்களின் முகம் எல்லாம் பளபளவென்று தெரிகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் வந்துவிட்டதா” என்று நக்கலாக கேட்டார். யார் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் வந்துவிட்டது கையை தூக்குங்கள், யார் யாருக்கெல்லாம் 1000 வேணும் கையை தூக்குங்கள் என்று சிரித்து கொண்டே நக்கலாக பேசினார். இதனால் கோபமடைந்த மக்கள் சிலர் அங்கிருந்து கிளம்பி விட்டனர்.
அதாவது, முதல்வர் செலுத்திய மகளிர் உரிமைத்தொகையில் தான், பெண்கள் பவுடர் போட்டுக்கொண்டு பளபளவென்று இருப்பது போல திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இவர்கள் கொடுத்த 1000 ரூபாய் பணத்தில் தான் நமது தாய்மார்கள் பவுடர் பூசினார்களா ? இதற்குமுன் அவர்கள் பவுடர் கூட வாங்க முடியாமல் இருந்தார்களா ? என்று இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
நாங்கள் கொடுக்கும் உரிமைத் தொகை 1000 ரூபாயில், கிரீம், பவுடர் எல்லாம் வாங்கி போட்டுக்கிட்டு பள பள-ன்னு இருக்கீங்க” என்று பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தும் உங்கள் ஈனபுத்தி உண்மையில் அருவருக்கத்தக்கது.
கையில் காசு கிடைத்தால் பெண்கள் கண்டபடி தான் செலவு செய்வார்கள் என்று, பொதுவெளியில் கூறும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது திரு.கதிர்ஆனந்த் ?
இதுதான் உங்கள் சமூக நீதியா? பெண்கள் முன்னேற்றமா திரு.மு.க.ஸ்டாலின் ?
அதுசரி,பெண்களை ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசுவது தானே திமுக-வின் ஸ்டைல்? அது உங்களின் இரத்ததிலேயே ஊறிய ஒன்று !
தொடர்ந்து இவ்வாறு பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் திமுக-வைக் கண்டு இப்பொழுதாவது பொங்கி எழுவாரா, திமுக- வின் பெண்ணியப் போராளி திருமதி.கனிமொழி ?
https://x.com/BJP4TamilNadu/status/1773014857216127265?s=20