பாகிஸ்தான் நிதி உதவியோடு நடத்தப்பட்டு வந்த கல் எறியும் சம்பவங்கள் தற்போது குறைந்துள்ளது என காஷ்மீர் சமூக ஆர்வலர் தஸ்லிமா அக்தர் தெரிவித்துள்ளதாக இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. பாகிஸ்தான் நிதி உதவியோடு நடத்தப்பட்டு வந்த கல் எறியும் சம்பவங்கள் தற்போது குறைந்துள்ளது என காஷ்மீர் சமூக ஆர்வலர் தஸ்லிமா அக்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கொண்டு காஷ்மீரின் உண்மை நிலை தெரியாமல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கூறி வரும் போராளிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் காஷ்மீரின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துச் சொன்ன காஷ்மீர் சமூக ஆர்வலர் தஸ்லிமா அக்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.