கன்யாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த நரிப்பாளையம் எங்கணும் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தாங்கள் மிகவும் வறுமையில் வாடுவதாகவும். தன்னோடு சேர்த்து தங்களின் கிராமத்தில் உள்ள சுமார் 50 குடும்பங்களின் நிலையும் இதுதான் எனவும். தங்களின் கிராமத்தில் ஒரு மளிகை காடை கூட இல்லை எனவே கிராமத்தை விட்டு வெளியே செல்லவும் இயலாமல் கஷ்டப்படுவதாக கூறி இருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சினர் படையெடுத்து சென்றுள்ளனர். உதவ வந்திருக்கிறார்கள் என நினைத்த அந்த பெண்ணை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டிச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள போவதாக கண்ணீரோடு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தது, போன் பேசியது என ஏதேதோ விஷயங்களை எல்லாம் போட்டு “MAN With a PLANE” என்றெல்லாம் சிலருக்கு கூஜா தூக்கிய சமூக வலைதள போராளிகள், ஓடுக்கப்படும் மக்களின் உரிமை பேசும் அமைப்புகள், ஏன் ஊடகங்களே கூட பெரிதாக இந்த பக்கம் தலைகாட்டவில்லை.
கடந்த ஆட்சியின் போது ஊரடங்கு போட்டால் மக்களின் நிலை என்ன ஆகும், அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்றெல்லாம் ஓலமிட்ட எந்த ஓநாய்களும் இம்முறை வாய் திறக்காமல் மூடிக்கொண்டிருப்பது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
https://www.facebook.com/dhivya.dharshini.503092/videos/326590502163940