ஒன்றியமா..? ஒரு அங்குல நிலத்தையும் பிரிக்க அதிகாரம் இல்லை..

ஒன்றியமா..? ஒரு அங்குல நிலத்தையும் பிரிக்க அதிகாரம் இல்லை..

Share it if you like it

சமீப காலமாக நமது மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே பலர் சொல்லி வருகிறார்கள்.

விளக்கம் கேட்டால் “India, that is Bharat, shall be a Union of States” என்ற அரசியலமைப்பு சரத்தை பதிலாக கூறி, அரசியலமைப்பே அப்படி தான் சொல்கிறது என்கிறார்கள். அதற்கு பின் எழுதப்பட்டள்ள சரத்துகள் பற்றியும், அதற்கு முன்னுள்ள முன்னுரை (preamble) பற்றியும் அவர்கள் எங்கேயும் எப்போதும் பேசுவதில்லை.

அவர்கள் பதிலாக சொல்லும் அரசியலமைப்பிலுள்ள சரத்து-1 அடங்கிய முதல் பகுதி இந்தியாவின் நிலப்பரப்பை கூறுவது தானே! அதாவது இந்தியா என்ற தேசத்தை ஆட்சி செய்வதற்கு தகுந்தவாறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களோ பிரிந்திருந்த மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இந்தியா என்ற தேசம் உருவானது போல் சித்தரித்து வருகிறார்கள்.

புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கும், இருக்கின்ற மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்தை பிரிப்பதற்கும், பிரிந்திருக்கும் மாநிலங்களை இணைத்து ஒரே மாநிலமாக மாற்றுவதற்கும், ஒரு மாநிலத்தின் பரப்பளவை கூட்டவது, குறைப்பது மற்றும் மாநில எல்லைகளில் மாற்றங்கள் செய்யும் அதிகாரங்கள் என அனைத்தும் நாடாளுமன்றத்தில் தானே உள்ளது. இதை தான் முதல் பகுதியுள்ள சரத்து-2,3 கூறுகிறது. இதற்கு உதாரணம் தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் ஆகியவை. மாநிலங்கள் மட்டுமல்லாமல் யூனியன் பிரதேசங்களும் உள்ளது தான் இந்தியா. சமீபத்தில் Dadra and Nagar Haveli and Daman and Diu என்ற யூனியன் பிரதேசங்களை ஒன்றாக இணைத்தது இந்திய அரசாங்கம். ஆக இவைகள் அனைத்தும் நிர்வாகத்திற்காக இந்திய நிலப்பரப்பில் மாற்றங்கள் செய்யப்படுவதே தவிர்த்து, அரசியல் சாசனம் ஒன்று தான். 1950’ல் நாம் அரசியல் சாசனத்தை ஏற்று கொண்டோம். State Reorganisation Act வந்ததோ 1956ஆம் ஆண்டில் தானே!

நெருக்கடி கால விதிகள்- குறிப்பாக சரத்து-356, 7வது பட்டியலிலுள்ள அதிகாரங்கள் என இந்திய அரசுக்குள்ள அதிகாரங்களை ஏன் இவர்கள் பேசுவதில்லை! இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களில் ‘Federal system with unitary bias’ என்பதும் ஒன்று. அதாவது ஒற்றை அரசியலமைப்பு, ஒற்றை குடியுரிமை, மாநிலங்களுக்கு மத்தியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், All India Services போன்றவைகள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் என்பதை உணருங்கள்.

இனியும் சர்வ வல்லமை கொண்ட இந்திய அரசை சிறுமை படுத்தி தேவையற்ற பிரிவினைகளை பேசினால் மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்கும் சூழல் தான் ஏற்படும். ஏனெனில் புரிந்து கொள்ளுங்கள், ஒரு அங்குல நிலத்தையும் இந்தியாவிலிருந்து பிரிக்க எந்த ஒரு மாநில அரசாங்கத்திற்கும் அதிகாரம் கிடையாது என்பதனை.

– Dina KS


Share it if you like it