உலகிலேயே மிகப்பெரிய கட்சிகளில் பா.ஜ.க. முதல் இடத்தையும், அ.தி.மு.க. 7-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. ஆனால், தி.மு.க. லிஸ்ட்லேயே இல்லை என்பதுதான் வேடிக்கை.
தொண்டர்களின் எண்ணிக்கை அடிப்படையில், உலகிலேயே மிகப்பெரிய 15 கட்சிகளின் குறித்த பட்டியலை World update (Statistics) நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில், பா.ஜ.க. முதலிடத்தை பிடித்திருக்கிறது. இக்கட்சிதான் உலகிலேயே அதிகளவு தொண்டர்களை கொண்ட கட்சி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2-வது இடத்தை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியும், 3-வது இடத்தை அமெரிக்காவின் டெமோகிரெடிக் பார்ட்டியும், 4-வது இடத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 5-வது இடத்தை அமெரிக்காவின் குடியரசு கட்சியும் பிடித்திருக்கின்றன.
மேலும், 7-வது இடத்தை அ.இ.அ.தி.மு.க.வும், 9-வது இடத்தை ஆம் ஆத்மி கட்சியும், 14-வது இடத்தை தெலுங்கு தேசம் கட்சியும் பிடித்திருக்கின்றன. அதாவது, இந்தியாவை பொறுத்தவரை, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 3-வது பெரிய கட்சி என்பது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது. அதேபோல, தி.மு.க.வுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 4-வது இடத்தையும், தெலுங்கு தேசம் கட்சி 14-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. ஆனால், தி.மு.க. இப்பட்டியலில் இடம்பெறவில்லை.
எனவே, 1.50 கோடி உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறுவதெல்லாம் பொய்யா கோபால் என்று தி.மு.க.வை கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.