உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சகிப்புத்தன்மையற்ற கொள்கை என்ற திட்டத்தின் மூலம் லஞ்சம், ஊழல் போன்ற செயல்களை சகித்துக்கொள்ளாமல் உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அரசு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டனர். குறிப்பாக, ஆக்ரா, லக்னோ, பாரய்லி, மீரட், அயோத்யா, கோராக்பூர், வாரணாசி, பிராயக்ராஜ், ஜான்சி மற்றும் கான்பூர் பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த தகவலின் படி, கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல், லஞ்ச புகாரில் இதுவரை 1,156 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது அம்மாநில உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. உத்திரபிரதேச அரசின் இச்செயல் நாடுமுழுவதும் உள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

யோகியின் சகிப்புத்தன்மை அற்ற செயல் – நாடுமுழுவதும் பொதுமக்கள் வரவேற்பு
Share it if you like it
Share it if you like it