உ.பி.யில் இதுவரை 10,713 என்கவுண்ட்டர்கள் நடைபெற்றுள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு, 23, கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாநிலத்தில், பா.ஜ.க. இரண்டாவது முறை ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பல்வேறு அதிரடி சம்பவங்களை யோகி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமூக விரோதிகள், பிரிவினைவாதிகள், ரெளடிகள் உள்ளிட்டவர்களை இரும்பு கரம் கொண்டு யோகி அரசு அடக்கி வருகிறது. இவரது, அதிரடி நடவடிக்கைக்கு பயந்து சமூக விரோதிகள் ஒன்று வேறு மாநிலங்களுக்கு ஓடி விடுகின்றனர் அல்லது மண்ணுக்குள் செல்லும் நிலையே இன்று வரை தொடர்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், அம்மாநில அரசு வெளியிட்ட குற்ற ஆவணங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ; அதாவது, கொடிய ரவுடிகள் உட்பட 178 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 6 ஆயிரம் குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 ஆண்டுகளில் 10,731 என்கவுண்ட்டர்களை காவல்துறை நடத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் குற்றவாளிகள், மாபியா கும்பல்களை சகித்துக் கொள்வதிலும் எனது அரசு நிச்சயம் கருணை காட்டாது என்று யோகி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.