அதிக் அகமதுவின் சொத்துக்களை கைப்பற்றி ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்த உ.பி. முதல்வருக்கு குவியும் பாராட்டுக்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவன் அதிக் அகமது. பிரபல தாதாவான இவன் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், 60-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலையில் உள்ளன. திடீரென அரசியல் கட்சியைத் தொடங்கி அம்மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்தான். இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியில் தனது கட்சியை இணைத்து கொண்டு மேற்கு அலகாபாத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றான்.
அந்த வகையில், 5 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 2004 – 2009 வரை புல்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். அதேவேளையில், தனது அரசியல் செல்வாக்கின் மூலம் உ.பி. முழுவதும் தனது ரவுடி சாம்ராஜ்ஜியத்தை அதிக் அகமது விரிவுப்படுத்தி இருந்தான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த 2017-ம் ஆண்டு உ.பி.யில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், உ.பி.யின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இதையடுத்து, ரவுடிகளின் கொட்டத்தை அடக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை யோகி மேற்கொண்டார். அந்தவகையில், அதிக் அகமது மற்றும் அவரது அடியாட்கள் 89 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தவிர, அதிக்கின் ரூ. 12,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. இதனிடையே, அதிக் அகமது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
உத்தர பிரதேசத்தை கடந்த 40 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த தாதாவின் சாம்ராஜ்ஜியத்தை முடிவு கட்டிய பெருமை யோகியை சேரும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், அதிக் அகமது ஆக்கிரமித்து வைத்திருந்த இடத்தை மீட்டு யோகி அரசு ஏழைகளுக்கு வீடு கட்டி தந்துள்ளது. இதுதான் யோகி மாடல் இதை பார்த்தாவது திராவிட மாடல் திருந்த வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.