‘நைஸ் ஸ்மைல்’… பாடகியிடம் ‘வழிந்த’ வைரமுத்து: வைரலாகும் வீடியோ!

‘நைஸ் ஸ்மைல்’… பாடகியிடம் ‘வழிந்த’ வைரமுத்து: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

‘யுவர் ஸ்மைல் ஈஸ் வெரி நைஸ்’ என்று பாடகியிடம் வைரமுத்து ஜொள்ளு விட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, ஒரு படத்திற்கான பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார். இப்பாடலை பாடுவதற்கு ஒரு பாடகியை வரவழைக்கிறார்கள். பின்னர், அவரிடம் அந்தப் பாடலை எந்த மெட்டில் பாடுவது என்று சொல்லித் தரப்படுகிறது. தொடர்ந்து, பாடலுக்கான ஒத்திகை நடைபெறுகிறது. அப்போது, அந்த பாடகி சிரித்த முகத்துடன் அப்பாடலை பாடிக்காண்பிக்கிறார். இந்த இடத்தில்தான் வைரமுத்துவின் லீலை அரங்கேறுகிறது.

அப்பாடகியை பார்த்து, யுவர் ஸ்மைல் ஈஸ் வெரி நைஸ் என்று ஆங்கிலத்தில் கூறுகிறார். இச்சம்பவம் எப்போது எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் வைரமுத்துவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வைரமுத்து மீது ஏற்கெனவே பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பலரும் வைரமுத்துவை வசைபாடி வருகின்றனர்.


Share it if you like it