உலகளாவிய மந்தநிலை… இந்தியா பூஜ்ஜியம்!

உலகளாவிய மந்தநிலை… இந்தியா பூஜ்ஜியம்!

Share it if you like it

உலகளாவிய மந்தநிலை நிகழ்தகவு 2023 தரவுகளின்படி இந்தியா நிகழாண்டு பூஜ்ஜிய சதவிகித மந்தநிலையால் முதலிடத்தில் இருக்கும் என்று ஜீரோதாவின் சி.இ.ஓ. நிகில் காமத் தெரிவித்திருக்கிறார்.

உலகளாவிய மந்தநிலை நிகழ்தகவு 2023 தரவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி, இந்தியா நிகழாண்டு பூஜ்ஜிய சதவிகித மந்தநிலையால் பாதிக்கப்படும். அதேசமயம், இங்கிலாந்தில் 75 சதவிகிதமும், அமெரிக்காவில் 65 சதவிகிதமும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் பிறகு, கனடாவில் 60 சதவிகிதமும், ஜெர்மனியில் 60 சதவிகிதமும் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மறுபுறம், உண்மையான ஜி.டி.பி. தரவுகளை பார்த்தால், மதிப்பிடப்பட்ட ஜி.டி.பி. 5.9 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 1.6 சதவிகித உண்மையான ஜி.டி.பி. வளர்ச்சியையும், கனடா 1.5 சதவிகிதத்தையும் கொண்டிருக்கிறது.

ஆகவே, இந்தப் பத்தாண்டு இந்தியாவுக்கே உரியது. ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு இங்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தியாவில் இளம் தலைமுறையினர் தொழில்முனைவோராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பல இந்தியர்கள் சிறந்த கல்வி வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், நிதி உதவி, உதவித்தொகை கிடைப்பதற்காக வெளிநாடு செல்ல விரும்புகிறார்கள். இருப்பினும், தற்போது இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் ஹப்பாக மாறியிருக்கிறது. ஆகவே, இளம் தலைமுறையினர் தொழில்முனைவோராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஜீரோதாவின் சி.இ.ஓ. நிகில் காமத் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it