சீனாவை எச்சரித்த இந்திய தளபதி

0
357
சீனாவை எச்சரித்த இந்திய தளபதி

சீனாவை இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவை சார்ந்த கப்பலானது இந்தியாவின் அந்தமான் கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்தது. பின்னர் இந்திய கடற்படையின் எதிர்ப்பால் அங்கிருந்து வெளியேறியது. இது சீனாவால் அனுப்பப்பட்ட உளவு கப்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது குறித்து கூறிய கப்பற்படை தளபதி கரம்பிர் சிங், சீன கப்பல் இந்திய நீர்எல்லையுக்குள் அனுமதியின்றி நுழைந்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்திய கடல் எல்லையை பயன்படுத்தவேண்டும் என்றால் இந்திய அரசின் அனுமதியை பெறவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது மூன்று விமானந்தாங்கி கப்பல்களை இந்திய கடற்படை வாங்க இருப்பதாக கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here