டெல்லியில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கலவரமாக மாற்றியதால் போலீசார் லத்தியால் தடியடி நடத்தினர். அதில் தடியடி நடத்தியதால் வயதான பெண்மணி ஒருவர் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுவதுபோல் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் மற்றொரு வீடியோ வெளியாகி அந்த வயதான பெண்மணி கூறியது பொய் என்று அம்பலமாகியுள்ளது. அந்த வீடியோவில் அதே பெண்மணி கற்களை எடுத்துக்கொண்டு போலீசாரின் மீது வீச ஓடி வரும் பொழுது தெரியாமல் சாக்கடையில் விழுந்து அடிபட்டு ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் அடிபட்டு வந்த ரத்தத்தை போலீசார் தாக்கியதில்தான் ரத்தம் வந்ததாக CAA எதிர்ப்பு போராட்டத்தினர் மிக தத்ரூபமாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஹிந்துக்கள் சிலர் முஸ்லிம்களின் மசூதி கோபுரத்தின்மீது ஏறி காவி கொடியை ஏற்றுவதுபோல் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இந்த வீடியோவானது பீகார் சமஸ்திபூரிலிருந்து, 2018 ஆம் ஆண்டு பிரபல ஜிகாதி பத்திரிகையாளரும் போலி செய்தித் தலைவருமான ராணா அய்யூப் வெளியிட்ட வீடியோ என்று போலீசாருக்கு தகவல் வந்ததால், அவர் மீது போலி செய்திகளை பரப்பியதற்காக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த ISI இருப்பதும் குறிப்பிடத்தக்கது.