அடுத்த வாரிசு ரெடி – ஸ்டாலினின் பேரன் இன்பநிதி-க்கு முட்டு கொடுக்க தயாரான பிரபல ஊடகம்..!

அடுத்த வாரிசு ரெடி – ஸ்டாலினின் பேரன் இன்பநிதி-க்கு முட்டு கொடுக்க தயாரான பிரபல ஊடகம்..!

Share it if you like it

தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல வாரிசு அரசியலுக்கு நாங்கள் எதிரி என்பது போல் தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கலைஞர் கூறிய இந்த பொன்மொழியை யாரும் மறந்திருக்க முடியாது. அதனை தொடர்ந்து ”என் குடும்பத்தில் இருந்து எனது மகனோ, மருமகனோ, யாரும் எனக்கு பிறகு அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தனது தந்தையை மிஞ்சும் வகையில் புதிய வசனத்தை கூறியிருந்தார் விடியலை தருவோம் என்று கூறிய தற்பொழுதைய தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அதனை தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் தி.மு.க-வினர் மனதில் உளவியல் ரீதியாக இன்பநிதியை திணிக்கும் முயற்சியில் இன்று வரை தி.மு.க-விற்கு சிறப்பாக முட்டு கொடுத்து வரும் Behindwoods ஊடகம் தற்பொழுது  இறங்கியுள்ளதோ? என்னும் ஐயம் மக்கள் மத்தியில் எழ துவங்கியுள்ளது.

நான்காம் கலைஞரே, ஐந்தாவது அண்ணாவே, சின்ன பெரியாரே, என்று இன்பநிதிக்கு முட்டு கொடுத்து போஸ்டர் ஒட்ட விலையில்லா உடன்பிறப்புகள் இந்நேரம் கிளம்பியிருக்க வேண்டாமா? என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Image

Image

Image

Image

 


Share it if you like it