பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட CPI(M) கட்சியின் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பதவி கொடுத்த கேரள முதல்வர் பெண் போராளி சுந்தரவள்ளியை தேடும் நெட்டிசன்கள்..!

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட CPI(M) கட்சியின் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பதவி கொடுத்த கேரள முதல்வர் பெண் போராளி சுந்தரவள்ளியை தேடும் நெட்டிசன்கள்..!

Share it if you like it

கேரள சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பி.கே சசி மீது அக்கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் பகீர் புகார் ஒன்றினை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ சசி மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்த காரணத்தினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒப்புதல் அளித்த பிறகு அக்கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீஜித் பணிக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.

சிபிஜ(எம்) கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ பி.கே சசி-க்கு கேரள சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமனம் செய்து உள்ளதாகவும்  கடவுளின் தேசத்தை தொடர்ந்து இது போன்று வைத்திருங்கள் என்று கேளர முதல்வருக்கும், சீதாராம் யெச்சூரி-க்கும் டேக் செய்து உள்ளார்.

பெண்களுக்கு எதிராக அநியாயம் நடந்ததால் குரல் கொடுப்பேன் என்று கூறி வரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெண் போராளி சுந்தரவள்ளி இது குறித்து பேச முன்வருவாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

https://indianexpress.com/article/india/kerala-cpim-mla-pk-sasi-suspended-for-6-months-on-sexual-harassment-charges-5465155/


Share it if you like it