அதிநவீன ஆயுதங்கள்  கொள்முதல் –இந்தியா

அதிநவீன ஆயுதங்கள் கொள்முதல் –இந்தியா

Share it if you like it

இந்தியாவின் பாதுகாப்பினை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசு ரஷ்யாவிடம் கூட்டு ஓத்துழைப்பு அடிப்படையில் முதற்கட்டமாக ஒரு லட்சம் ஏ.கே 203 அதிநவீன ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்துள்ளது. அதற்கு அடுத்தக் கட்டமாக நம் நாட்டிலேயே ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் ஆறரை லட்சம் ஏ.கே-203 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்பே மத்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து 72,400 எஸ்ஜஜி-716 ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்யும் பணி தொடங்கி விட்டதாகவும், இந்த ரக ஆயுதங்கள் எல்லை பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் என்றும். ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் ஆயுதங்கள் மற்ற வீரர்களுக்கு வழங்கப்படும் என்று ராணுவ செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it