இந்தியன் ரயில்வேதுறை அண்மையில் பழைய சாதனைகளை முறியடிக்கும் விதமாக சரக்கு ரயிலில் 4 மின்சார என்ஜினை பொறுத்தி கிட்ட தட்ட 2.8 கீ.மீ நீளத்திற்கு ஷேஷ்நாக்’ சரக்கு ரயிலை இயக்கி ரயில்வே நிர்வாகம் சாதனை புரிந்தது
ஷேஷ்நாக்கின் சாதனையை முறியடிக்கும் விதமாக வெறும் சில நாட்களிலேயே ‘அனகோண்டா’ சரக்கு ரயிலை இந்திய ரயில்வேதுறை இயக்கி தனது பழைய சாதனையை முறியடித்துள்ளது. மூன்று ரயில்களை ஒன்றாக இணைத்து அதில் 1,500 டன்களுக்கு மேல் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த சரக்கு ரயிலை இந்திய ரயில்வேதுறை இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2.8 கீ.மீ ஷேஷ்நாக்’ சரக்கு ரயிலின் காணொலி
Indian Railways breaks another record. Operates 'SheshNaag', a 2.8 Km long train amalgamating 4 empty BOXN rakes, powered by 4 sets of electric locomotives
'SheshNaag' is the longest train ever to run on Indian Railways. pic.twitter.com/t3fKKVJSkJ
— Ministry of Railways (@RailMinIndia) July 2, 2020
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத் திறன் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த ரயில் இன்ஜினை மத்திய அரசு அண்மையில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. உள்நாட்டிலேயே தயாரித்த உலகின் 6-வது நாடாக இந்தியா சமீபத்தில் மாறியிருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை பட கூடிய நிகழ்வாகும்.
Make in India Powers Railway Manufacturing: 12,000 horsepower Locomotive Engine, built in Madhepura, Bihar departed from Pt. Deen Dayal Upadhyaya Station in UP
The powerful & fast electric loco will cut down emission & operating cost & revolutionise freight movement in India. pic.twitter.com/6sKhPM4nlt
— Piyush Goyal (@PiyushGoyal) May 19, 2020