திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சட்டவிரோத பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, நட்சத்திர ஓட்டல், மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது.
ஜெகத்ரட்சகனின் சிங்கப்பூர் சார்ந்த நிறுவனத்திற்கு சட்டத்துக்கு விரோதமாக பணத்தை அந்நிய செலவாணிக்கு மாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் 89.19 ரூபாய் கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ED seizes FEMA, agricultural lands, plots, houses in Tamil Nadu, balances in bank accounts & shares totaling to Rs.89.19 Crores held by S. Jagathrakshakan, Member of Lok Sabha & his family members for illegally acquired, held and transferred security in a Singapore based company.
— ED (@dir_ed) September 12, 2020