அன்று தமிழக மாணவிகள் இன்று தமிழக இளைஞர்கள் மனதின் குரல் பாரதப் பிரதமர் மோடி..!

அன்று தமிழக மாணவிகள் இன்று தமிழக இளைஞர்கள் மனதின் குரல் பாரதப் பிரதமர் மோடி..!

Share it if you like it

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரதப் பிரதமர் மோடி. தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் செய்த சாதனைகள் குறித்து. தனது உரையில் குறிப்பிட்டு பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர் என்பது அனைவரு அறிந்ததே.

மதுரையை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ராவின் சேவையை பாராட்டி இருந்தார்.. மற்றொரு முறை நாமக்கல் மாணவி கனிகா செய்த சாதனையை குறித்து மான்கி பாத் நிகழ்ச்சி’யில் பாரதப் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி இருந்தார்.

பாரதப் பிரதமர் மோடி 68-வது மனதின் குரல் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றும் பொழுது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  • தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது.
  •  சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும்
  • 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்
  •  உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும்
  •  இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது
  •  நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது
  • சிசு கர்ப்பத்தில் இருக்கும் போதும், அதன் குழந்தை பருவத்திலும், எத்தனை சிறப்பாக ஊட்டச்சத்து அதற்குக் கிடைக்கிறதோ, அத்தனை சிறப்பாக அதன் மனவளர்ச்சி ஏற்படும், ஆரோக்கியமாக இருக்கும். ஊட்டச்சத்துக்கான இந்த இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது
  • நாடு முழுவதிலும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும்

 


Share it if you like it