ஆபாச ஓவியர் பாலா மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நிலை பற்றி கீழ்த்தரமாகவும், அருவக்கதக்க, வகையில் விமர்சனம் செய்திருந்தனர்.
டெல்லியில் சி.ஏ.ஏ-விற்கு எதிராக போராடிய நபர்களில் ’அய்மன் ரிஸ்வி’யும் ஒருவர். அண்மையில் தனது வன்மம் நிறைந்த கருத்தினை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷா இறந்தால் கொரோனா வைரஸை நாங்கள் நம்புவோம். ஏனெனில் பாஜகவினர் மற்றும் பாஜக நட்பு ஊடகங்கள் யாரும் கொரோனா வைரஸால் இதுவரை இறக்கவில்லை. ஆனால் ஒரு முஸ்லீம் அல்லது தலித் ஒரு சாதாரண நோய் கூட வந்தால் அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
அமித்ஷா மரணம் அடைய முஸ்லிம்கள் ஜெபிக்குமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார். ஒருவரின் மரணத்தை விரும்பும் இவரின் தீய எண்ணத்தை கண்டித்து மக்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.