அமீர்கானை அடுத்து ஹிந்து கடவுளை அவமதித்த ஆதார் மாலிக்…! தொடரும் ஹிந்து விரோத போக்கு…!

அமீர்கானை அடுத்து ஹிந்து கடவுளை அவமதித்த ஆதார் மாலிக்…! தொடரும் ஹிந்து விரோத போக்கு…!

Share it if you like it

தமிழ் சினிமா கிறிஸ்தவ மிஷநரிகள், கம்யூனிஸ சித்தாந்தவாதிகளின் பிடியில்  இருப்பதால் ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் சமீபகாலமாக அதிகமாக வெளிவருவதை காண முடிகிறது என்று பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டி வரும் நிலை உள்ளது.

அதே போன்று பாலிவுட்டில் தாவூத் இப்ராஹிம் கூட்டத்தின் தலையீடு அதிகமாக இருப்பதால். ஹிந்தக்களின் உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகளும் வெளியாகி வருகிறது. பி.கே திரைப்படத்தில் அமீர்கான் ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருந்தது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர், நகைச்சுவை பேச்சாளர் என்று அறியப்படும் ஆதார் மாலிக் விநாயக பெருமானை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் விதமாக பேசிய காணொலி தற்பொழுது வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it