வரலாறும் , போராட்டமும் நிறைந்த ஜம்மூ& காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக, அவ்வூர் மக்கள் சொல்லோண்ணா துயரத்திலும் , உரிமைகள் கிடைக்காமலும் இருந்த நிலையில்.
மத்திய அரசு அங்கு அமைதி ஏற்படவும் மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள் கிடைக்கவும். அங்கு நீண்டகாலமாக இருந்த 370 மற்றும் 35A நீக்கியதன் மூலம், அம்மாநிலம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மக்கள், தங்கள் முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்ய வெளிநாட்டு தூதர்கள் 16 பேர், மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் காஷ்மீருக்கு இன்று வருகை தந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். உள்ளூர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தனர்.
காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பொய்ப்பிரச்சாரம் செய்வதாக அம்மக்கள் குற்றம் சாட்டினர். இப்பொழுது நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஜம்மு காஷ்மீரில் வன்முறையை பரப்ப முயன்று அது ,முடியாமல் பாகிஸ்தான் விரக்தி அடைந்துள்ளதாக. கூறிய அவர்கள் காஷ்மீரில் இருந்து ஒரு அங்குல இடத்தைக் கூட பாகிஸ்தானால் பறிக்க முடியாது, என்று நீங்கள் அந்நாட்டிடம் கூறவேண்டும் என்று தங்கள் கருத்தை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.