அயோத்தியில் சங்கமித்த ஆர்.எஸ்.எஸ் !

அயோத்தியில் சங்கமித்த ஆர்.எஸ்.எஸ் !

Share it if you like it

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) முதன்முறையாக அயோத்தியில் ஒரு தனித்துவமான சாதனை படைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது. அயோத்தியில் 101 ஷாகா என்று அழைக்கப்படும் தினசரி கூடுதல் நிகழ்வானது ஒரே நேரத்தில் சரயு ஆற்றின் கரையில் நடத்தப்பட்டன. அயோத்தியில் நடந்த இந்த மாபெரும் நிகழ்வின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஷாகாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் 101-ஷாகா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கு ஷாகாக்கள் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டன. ஸ்வயம் சேவகர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி, யோகா மற்றும் உடற் பயிற்சிகளை நிகழ்த்தினர். மேலும் அறிவுசார்ந்த கலந்துரையாடல்களும் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். ஷாகாவால் சமுதாயத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதற்கு மக்கள் சாட்சியாக உள்ளனர். மேலும் பலருக்கு இந்த நிகழ்வுக்குப் பிறகு RSS ஸ்வயம்சேவர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்ததால் அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி அவர்களை பெரிதும் பாராட்டினர்.

ஷாகா மகாகும்பத்தின் ஒரு பகுதியாக இருந்த ஸ்வயம்சேவர்களை பற்றி உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் -ன் கிழக்கு உ.பி. பிராந்தியத்தின் பௌதிக் பிரமுக், மிதிலேஷ் நாராயண், சங்கத்தின் ஸ்வயம் சேவர்கள் ஒரு பொதுவான குறிக்கோளுடன் செயல்படுகிறார்கள். இது ஒவ்வொரு நாளும் ஷாகாவில் கலந்துகொள்வதும் அதே ஷாகாவிலிருந்து உத்வேகம் பெறுவதும் ஆகும். அணுஅணுவாக ஒரு வலுவான மாபெரும் தேசமாக மாற்றுவதும் உலகிற்கே குருவாக நமது பாரதம் ஆக வேண்டும் என்பதே நமது வேலை ஆகும். பாரத மாதாவுக்காக பல லட்சக்கணக்கான ஸ்வயம் சேவர்களின் சேவை மற்றும் தியாகங்களின் காரணமாகவே, சமூகத்தில் சாதகமான மாற்றங்களை இன்று நாம் காண முடிகிறது. வேறு எந்த ஒரு எதிர்வினையாகவும்  சங்கம் எந்தப் பணியிலும் செயல்படாது என்று அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் பணி எப்போதும் சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்தை நோக்கியதாகும், என்று என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய டாக்டர் ஐ.பேனர்ஜி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது சமூகத்திற்கான சேவையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இத்தகைய ஒரு மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்வதன் மூலம், ஆர்.எஸ்.எஸ்ஸின் வலிமையையும் உறுதியையும் சமூகத்திற்கு வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல RSS அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பு மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it