வராற்று ரீதியிலும் மதத்தின் அடிப்படையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ள உச்சநீதிமன்றத்தின் ஆனணயை காலம் தாழ்த்தாமல், விரைவில் அதற்குரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ராமர் கோவில் கட்டுவதில் தொடர்ந்து தம் முழு ஆதரவு வழங்கி வரும் இக்பால் அன்சாரி கூறியுள்ளார். மேலும் பாரத பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ஆகியோருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். உலகின் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் மக்களின் எண்ணங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், நன்கு திட்டமிட்டு அதனை உலக தரத்தில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் ராமர் கோவில் சரயு நதியை பார்க்கும் திசையில் அழகுற வடிவமைத்து. அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களும் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்று கூறியுள்ளார். அயோத்தி வடிவிலேயே ரயில் நிலையம் அமைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அயோத்தி தீர்ப்பு பிரதமருக்கு கோரிக்கை – இக்பால் அன்சாரி!
Share it if you like it
Share it if you like it